Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

தென்கிழக்கு மனிடோபாவில் பாரிய காட்டுத்தீ

மே 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்கிழக்கு மனிடோபாவில், லக் டு போனட் நகருக்கு அருகே ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உடல்களை காவல்துறையினர் தற்போது மீட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை சில நபர்கள் தீயில் சிக்கியிருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

எனினும், தீயின் உக்கிரம் காரணமாக புதன்கிழமை காலை வரை அவர்களைச் சென்றடைய முடியவில்லை என, காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, இந்த தீ சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவில் எரிந்து கொண்டிருந்தது.

விண்ணிபெக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெண்டிகோ சாலை அருகே இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உடற்கூறு ஆய்வு செய்த பின்னரே உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும் என்று, காவல்துறை அதிகாரி கிறிஸ் ஹாஸ்டி தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் ஏற்பட்ட காயங்களால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பணிபுரியும் வகையில் பொதுமக்கள் தீப்ப்பரவல் ஏற்பட்ட பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு திரு. ஹாஸ்டி கேட்டுக்கொண்டார்.

வெப்பப் பகுதிகள், அறுந்து விழுந்த மின் கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் போன்ற ஆபத்துகள் அங்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசர ஊர்திகள் மட்டுமே அப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நெடுஞ்சாலை 313 இல், காவல்துறையினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.

இதேவேளை, லக் டு போனட் நகர் அருகே ஏற்பட்ட காட்டுத்தீ செவ்வாய்க்கிழமை பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் வேகமாக பரவியதால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் நினைவேந்தல்….
அடுத்த செய்தி டெர்ரபோன் வாக்குப்பதிவின் எண்ணிக்கை முடிவு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி…..

மார்ச் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஜூலை 7, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

ஜூலை 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கனடா வானிலை மையம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?