குடல் ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.அதிலும் குறிப்பாக நம் உடலுக்கு குடலின் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலும் நார்ச்சத்து குறைபாடு,பிறகு பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது, நீர் சத்து குறைபாடு இருந்தால் குடலில் பிரச்சனை ஏற்படும்.
குடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்ற காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
இது மட்டுமில்லாமல் யோகா உடற்பயிற்சி செய்வது நம் குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
ஒக்சினேற்றம் நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதன் மூலம் குடலை சுத்தப்படுத்தி அதில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே குடலின் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்ட உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
