Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி எவ்வாறு போட்டியிடும் – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

மார்ச் 2, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும், தேர்தலின் பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும் ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில்,தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இடம்பெற உள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல மாவட்ட கிளைகளையும் சந்தித்து வரும் நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (2) மன்னார் மாவட்ட கிளையுடன் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தார்.

கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது. கட்சியின் சகல அங்கத்தவர்களும் குறித்த கூட்டத்தில் பங்கு பற்றி இருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் போட்டியிட உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகள் குறித்து ஆராய்ந்துள்ளதோடு, குறித்த சபைகளில் வேட்பாளர்களை நியமிப்பது குறித்தும் குறிப்பாக வட்டார வேட்பாளர்கள், இரண்டாவது பட்டியல் வேட்பாளர்கள் நியமிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. ஏற்கனவே நியமிக்கப்பட்ட வேட்பாளர்களில் நாட்டில் இல்லாதவர்கள் மற்றும் வேறு கட்சியில் இணைந்தவர்கள் குறித்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

எனினும் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களை வட்டார வேட்பாளராக நியமிப்பது என ஏற்கனவே கட்சி எடுத்த தீர்மானத்துடன் மன்னார் மாவட்ட கிளையுடம் இணங்கி உள்ளனர்.

ஏனைய தமிழ் தேசியக் கட்சியுடனும் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும், தேர்தலின் பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும், ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில், தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சபைகளுக்கும் ஏற்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.

அனைவரினதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும் பல்வேறு விடயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

முந்தைய செய்தி வல்வெட்டித்துறை படுகொலையின் வாக்குமூலங்கள்
அடுத்த செய்தி பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை தூய்மைப்படுத்திய மட்டு அழகு கலை அமைப்பு.

மார்ச் 8, 2025
இலங்கை

ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக மாற்றும் பயிற்சி நேற்று!

ஜூலை 30, 2025
இலங்கை

மன்னாரில் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்திட்டத்தின் ஊடாக கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு!

ஜூலை 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?