கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைத் தளமாகக் கொண்ட Pacific Blue Cross சுகாதாரக் காப்புறுதி நிறுவனம், சைபர் பாதுகாப்பு சம்பவம் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நிறுவனத்தின் சில சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி நிறுவனத்தின் இணையத்தளமும் செயலிழந்திருந்தது.
சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சேவைகளைப் பாதுகாப்பாக மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தின் தாக்கம் மற்றும் பாதிப்பின் அளவைக் கண்டறிவதற்காக வெளிப்புற சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
