ஒன்ராறியோ மாகாணத்தின் Brantford–Brant South தொகுதியில் நடைபெறவுள்ள மத்திய இடைத்தேர்தல் கனடாவின் அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தத் தொகுதிக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் Pierre Poilievre தலைமையிலான கட்சிக்கு இந்தத் தேர்தல் அரசியல் ரீதியாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஆளும் லிபரல் கட்சிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையிலான ஆதரவு நிலையை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது.
நவம்பர் 27 முதல் 30ஆம் திகதி வரை முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுகிறது. தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த நாட்களில் வாக்களிக்க முடியும்.
