ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Kunar மாகாணத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது ஏழு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 99 பேர் வரை காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் உள்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்கு அருகில் சுரங்கத் தொழில் நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்தே இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பலர் மாணவர்கள் எனக் கூறப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்திற்கான முழுமையான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
