Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

கெய்ரோ எரிபொருள் தாங்கி விபத்து: சாரதி கைது

நவம்பர் 26, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

எகிப்தின் கெய்ரோ நகரிலுள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் எரிபொருள் தாங்கி வாகனம் விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விபத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சாரதி ஒருவரை எகிப்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பழைய நகர மையத்திற்கு வடக்கே உள்ள சுற்றுவட்டச் சாலையில் மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் வாகனத்தைச் செலுத்தியதாகவும், பாதை மாறும்போது தனது காரின் பக்கவாட்டுப் பகுதி எரிபொருள் தாங்கியின் மீது மோதியதாகவும் குறித்த சாரதி வாக்குமூலம் அளித்துள்ளதாகப் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வார்ராக் (Warraq) பகுதியில் புதன்கிழமை (25.11.2026) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், தீக்காயங்கள் மற்றும் புகை மூட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, வாகனங்களை முந்திச் செல்ல முயன்றவேளை தனது காரின் இடது பக்கம் எரிபொருள் தாங்கியின் வலது பின்பக்கத்தில் மோதியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் எரிபொருள் தாங்கியின் டயர் ஒன்று வெடித்ததுடன், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுப்பகுதியிலுள்ள கான்கிரீட் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் எரிபொருள் கசிந்து தீப்பற்றியதாகப் பொது வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெயர் வெளியிடப்படாத நிலையில், விபத்து நிகழ்ந்தபோது அவர் தனது தந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, எரிபொருள் தாங்கிக்கு முன்னால் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததால் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததாக அரச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர், எரிந்து போன வாகனங்களின் எச்சங்கள் அகற்றப்பட்டு குறித்த நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 மில்லியன் எகிப்திய பவுண்டுகள் (சுமார் 182,000 அமெரிக்க டொலர்கள்) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (26.11.2026) தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விபத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் நடத்தப்படும் அனைத்துக் கொண்டாட்ட நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கெய்ரோ நெடுஞ்சாலை தீ விபத்து: 31 பேர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

சுவீடன் நாடாளுமன்றத் தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி

செப்டம்பர் 18, 2026
அண்மைய செய்திகள்உலகம்

டெக்சாஸில் நிலநடுக்கம்

மே 4, 2025
உலகம்

எட்னா எரிமலை வெடிப்பு: இத்தாலியின் கேடானியா விமான நிலையம் மூடல்

ஆகஸ்ட் 14, 2026
உலகம்

மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?