மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக முழுமையாகத் தயார் படுத்தப்பட்டுள்ளது.
நாளைய தினம் ( 27.11.2026 ) அனுஷ்டிக்கப்பட உள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, துயிலுமில்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்கும் பணிகள் துயிலுமில்ல பணிக் குழுவினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வளாகம் எங்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, நினைவேந்தல் சுடரேற்றுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அஞ்சலி செலுத்துவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாளைய தினம் (27.11.2026) மாலை நடைபெற உள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்த உள்ளனர்.
