வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்குத் திரும்பும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இவ்வாறான நபர்களின் குற்றப் பதிவுகளை இலங்கைப் பொலிஸ் கட்டமைப்பில் இணைப்பது உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், சிறுவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கட்டாயப் பின்னணிப் பரிசோதனை மேற்கொள்ளுதல், வெளிநாட்டு குற்றப் பதிவுகளைப் பெற்றுக்கொள்ள சர்வதேச ஒருங்கிணைப்பு முறைமையை உருவாக்குதல் ஆகிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், சிறுவர் பாதுகாப்பு, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத் திருத்தம் மற்றும் பெண்கள், சிறுவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளைத் துரிதப்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
