திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஆளுநரிடம் ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து, இந்திய அரசியலமைப்பின் 167 ஆம் சட்டப்பிரிவின் கீழ் தமிழக அரசிடம் ஆ ளுநர் விளக்கம் கேட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துப் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அவமதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது என்றும், இது அரசியலமைப்புக்கு விரோதமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்ட ரீதியாக தமிழக முதல்வர் ஜோசெப் விஜய் இதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னதாக, கோயில் ஆவணங்கள், ஆகமச் சான்றுகள் மற்றும் கோயில் ஸ்தானீக பட்டர்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றத் தீர்மானித்ததாகக் கோயில் அறங்காவலர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
எனினும், இந்த அறிக்கைக்குத் தாம் எவ்விதக் கருத்துகளையும் அளிக்கவில்லை எனத் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானீக பட்டர்கள் மறுத்துள்ளனர்.
தமது மறுப்பைத் தெரிவித்து, கோயில் நிர்வாக அதிகாரி, துணைA ஆணையர், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு ஸ்தானீக பட்டர்கள் கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
