இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (21) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தீபம் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா. பாலேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.
