சமூகசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் நிகழ்நிலைத் தரவு முறைமையில் தகவல்களை உள்ளீடு செய்வது தொடர்பான மாவட்ட மட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரஜாசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் கிராம மட்டத் தரவுகளைச் சேகரித்து, அவற்றை நிகழ்நிலைத் தரவு முறைமையில் உள்ளீடு செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி, உதவிப் பணிப்பாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டிஜிட்டல் முறைமைகள் தொடர்பான விளக்கங்களை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சரதாஞ்சலி மனோகரனும், கிராமிய அபிவிருத்திக் குழு மட்டத்தில் அடிப்படைத் தரவுகளைச் சேகரித்தல் மற்றும் தரவு நூலில் தகவல்களை உள்ளீடு செய்தல் தொடர்பான விளக்கங்களை சமூகசக்தி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் என். யோகேஸ்வரனும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு வழங்கினர்.
மேலும், பிரதேச செயலாளர்களிடம் கிராம அடிப்படையிலான அடிப்படைத் தரவு நூல்கள் கையளிக்கப்பட்டதுடன், அவற்றைப் பயன்படுத்துதல் மற்றும் தரவுகளை முறையாகப் பதிவேற்றுதல் தொடர்பான விரிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.
