கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான விரத மாலை அணிவிப்பு நிகழ்வுகள் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (17) பக்திபூர்வமாக நடைபெற்றன.
குருமன்காடு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் சபரிமலைவாசன் தீர்த்த யாத்திரை குழுவின் ஏற்பாட்டில் குருசாமி மணி சாமி தலைமையிலும், தாண்டிக்குளம் ஸ்ரீ ஐயனார் ஆலயத்தில் ஐயனார் சபரி யாத்திரை குழுவின் ஏற்பாட்டில் கிருஷ்ணா குருசாமி தலைமையிலும் விசேட பூஜை வழிபாடுகளுடன் மாலை அணிவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதேவேளை, மாவட்டத்தின் ஏனைய ஆலயங்களிலும் அதிகாலை முதல் “சுவாமியே சரணம் ஐயப்பா” எனும் சரண கோஷத்துடன் புனித மாலை அணிந்து தமது மண்டல கால விரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
