பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் மஞ்சள் அங்கி (Yellow Vest) இயக்கத்தினர் மற்றும் இளைஞர் அமைப்புகள் பலவும் பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சின் தகவலின்படி, நாடளாவிய ரீதியில் 106,000 பேர் போராட்டங்களில் பங்கேற்றுள்ளதுடன், தலைநகர் பாரிஸில் மாத்திரம் 24,000 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
எனினும், நாடு முழுவதும் சுமார் இரண்டு இலட்சம் பேர் போராட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும், பாரிஸில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அண்மித்தோர் கலந்துகொண்டுள்ளதாகவும் மாணவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த முறை போராட்டங்களில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பிரான்ஸில் பாடசாலை முடக்கங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
