Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கு கடலில் 10 தமிழக மீனவர்கள் கைது.

பிப்ரவரி 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன் மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட நான்கு கடற்தொழிலாளர்களையும் , அவர்களின் ஒரு படகினையும் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், அவர்களை மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக மன்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 06 கடற்தொழிலாளர்களையும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், அவர்களை யாழ்ப்பாண நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.

அதேவேளை இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடந்த 50 நாட்களில் 99 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை.
அடுத்த செய்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

டிசம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரச அலுவலகங்களுக்கு புதன்கிழமை விடுமுறை இரத்து

ஏப்ரல் 6, 2026
இலங்கை

இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள் – நூர் மொஹமட் ஆலம்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கச்சத்தீவு பெருவிழா – கடற்படையினருக்கு 32 மில்லியன் நிதி.

பிப்ரவரி 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?