மொன்றியல் நகரின் பல முக்கிய மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் படுக்கை பயன்பாடு 200 சதவீதத்தையும் கடந்துள்ளது.
குறிப்பாக:
Lakeshore மருத்துவமனை – 226 சதவீதம்.
Jewish General மருத்துவமனை – 219 சதவீதம்.
Montreal Children’s Hospital – 217 சதவீதம்.
Royal Victoria மருத்துவமனை – 209 சதவீதம்.
Lachine மருத்துவமனை – 207 சதவீதம்.
Lakeshore மருத்துவமனையில் 35 நோயாளிகளும், Royal Victoria மருத்துவமனையில் 29 நோயாளிகளும் 48 மணிநேரத்திற்கும் மேலாக அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணம் முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஸ்ட்ரெச்சரில் காத்திருந்த நோயாளிகளின் சராசரிக் காத்திருப்பு நேரம் 18 மணிநேரம் 40 நிமிடங்களாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலைமை மருத்துவமனைகளின் நோயாளர் பராமரிப்புத் திறன் மற்றும் அவசர சிகிச்சைச் சேவைகள் தொடர்பில் மீண்டும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது
