முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையானது கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மேட்கொள்ளப்பட்டது.அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு சில வாரங்கள் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.
தற்போது அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதால் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
