சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1990ஆம் ஆண்டு வெளியான ‘அதிசயப் பிறவி’ திரைப்படத்தின் அதே தலைப்பில் தற்போது நடிகர் சந்தானம் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சந்தானத்தின் 20ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இதனை சுதாமன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டைம் லூப் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கொண்ட கதையாக இப்படம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
