Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பில் இரண்டு தமிழ் நூல்களின் வெளியீட்டு விழா

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு சைவத் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில், சைவப்புலவரும் சைவபண்டிதருமான சுந்தரமூர்த்தி துஷ்யந்த் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

“இந்துப் பண்பாட்டு மரபில் ஆகமங்கள்” மற்றும் “இந்துக் கோயில்களும் கலைகளும்” ஆகிய இரண்டு நூல்களே இதன்போது வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வு நவம்பர் 7ஆம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு, மட்டக்களப்பு பெரிய கல்லாறு இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வின் தலைமையை சைவப்புலவர், சைவபண்டிதர், பேராசிரியர் தி. சதானந்தன் ஏற்கவுள்ளார். சிறப்பு ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ இரா.கு. நடேஷ டுணஸ்கந்த சிவாச்சாரியார் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவர் ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் தேவஸ்தானம், பெரிய கல்லாறு ஆலயத்தின் குருக்களாவார்.

மேலும், நிகழ்வில் முத்தன்மை அதிதியாக சைவப்புலவர், சைவபண்டிதர் கலாநிதி எஸ். தில்லைநாதன் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது அறிஞர்களின் உரைகள், நூல் அறிமுகம், ஆய்வுரைகள் உள்ளிட்ட பன்னிரண்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், பிரபல பேச்சாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் உரைகளும் இடம்பெறவுள்ளன. பிரதம அதிதிகளாக பேராசிரியர் சாந்தி கேசவன், பேராசிரியர் நா. வாமன், கலாநிதி ந. சுபராஜ் மற்றும் திருமதி ஹேமலோஜினி குமரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

கௌரவ அதிதிகளாக வெ. கனகசுந்தரம், எஸ். பேரின்பராஜா மற்றும் த. சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வின் கலை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பில் திருமதி பிரஷன்யா சுரேஷ், திருமதி ஷரணியா பபீஷன் மற்றும் சிவஸ்ரீ சு. விதுஷன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ் மரபு, இந்துப் பண்பாடு, ஆலய வழிபாட்டு மரபுகள் மற்றும் கோயில் கலைகள் தொடர்பான அறிவையும் ஆய்வுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை
அடுத்த செய்தி சத்யவான் சாவித்ரி திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது தொடர்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை!

ஆகஸ்ட் 24, 2025
இலங்கை

அச்சத்தில் ராஜபக்ஷக்கள் -இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

ஆகஸ்ட் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கின் போரில் மத்திய கல்லூரி வெற்றி

மார்ச் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

ஆகஸ்ட் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?