மொன்றியல் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் அமைந்துள்ள பயணிகளை வாகனத்தில் இறக்கிவிடும் இடம், அக்டோபர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை, ஒவ்வொரு இரவும் மூடப்படவுள்ளது.
இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த மூடல் அமலில் இருக்கும் என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள REM தானியங்கி ரயில் நிலையத்துடன், விமான நிலையத்தின் குடிநீர் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை இணைக்கும் கட்டுமானப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நேரத்தில் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், வருகைப் பகுதியிலிருந்து மேல்தளத்தில் அமைந்துள்ள புறப்பாட்டுப் பகுதிக்கு மாற்றிவிடப்படும். போக்குவரத்தை வழிநடத்த விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களும் பணியில் இருப்பார்கள்.
எனவே, இரவு நேரங்களில் விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகளும், விமானத்திலிருந்து வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகளும், இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாக அங்குள்ள அறிவிப்புப் பலகைகளையும் பணியாளர்களின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

