மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்று சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழி காட்டலில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மன்னார் பொலிஸார் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோரை கண்டறிந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் போதைப்பொருள் பாவனை இன்றி பொறுப்புடன் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அரச தனியார் பேருந்து சாரதிகள்,முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாகன சாரதிகள், மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் என நூற்றுக்கணக்கானோர் குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துவோருக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

