Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் முன்னாள் கெப்டனுக்கு அவுஸ்திரேலியாவில் முக்கிய பதவி

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியான சசிகலா சிறிவர்தன தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவிலுள்ள பிளெண்டி வெலி கிரிக்கெட் கழகத்தில் முழுநேர பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பயிற்றுவிப்பாளராக பெண்கள் கழக அணிகளுக்கு 2026-27 பருவகாலத்தில் பயிற்சி அளித்து வருகிறார். இதற்கு முன்னர் தலைமை-பயிற்றுவிப்பாளர் பாத்திரத்தில் பணியாற்றிய அவர், தற்போது முழுமையாக பயிற்றுவிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு பயிற்றுவிப்பாளராக தனது அனுபவத்தை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில், இளம் வீரர்களின் திறன்களை மேம்படுத்த உதவுவதற்கான இந்த வாய்ப்பை தான் மிக விருப்பத்துடன் செயல்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்த முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர், 2020 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தனது இரண்டாம் நிலை பயிற்றுவிப்பாளர் தகுதியைப் பெற்ற அவர், முதலாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியுடன் பணியாற்றினார்.

தனது பயிற்றுவிப்புப் பயணத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக அவர் அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஆரம்பத்தில் பிரிஸ்பேனில் உள்ள வின்னம்-மேன்லி அணியில் ஒரு வீராங்கனையாகவும் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் இணைந்தார்.

2024 ஆம் ஆண்டில் மெல்போர்னின் பாக்ஸ் ஹில் (Box Hill) கிரிக்கெட் கழகத்திற்கு மாறிய அவர், 2025 இல் தலைமை-பயிற்றுவிப்பாளராக பிளெண்டி வெலி கழகத்தில் இணைந்தார்.

தொடர்ந்து பயிற்றுவிப்பாளராகப் பணியாற்ற விரும்புவதாகக் கூறிய சிரிவர்தன, எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் மாநில அளவில் பயிற்றுவிக்கவும் அல்லது இலங்கை தேசிய அணிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயல்படவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி சுவையான இறால் டெவல் செய்வது எப்படி ?
அடுத்த செய்தி கண் பார்வை பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சீத்தாப்பழம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

மே 20, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

மும்பை அணியோடு இணையும் மஹேல!

அக்டோபர் 14, 2024
அண்மைய செய்திகள்விளையாட்டு

இலங்கை வீரருக்கு 20 ஆண்டு தடை

செப்டம்பர் 19, 2024
அண்மைய செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்தோடு மோதும் பப்புவா நியூகினியா!

ஜூன் 17, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?