Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் உயர்நிலைப் பள்ளியில் தொடர் வன்முறை – 30 மாணவர்கள் இடைநீக்கம்

அக்டோபர் 27, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் மொன்றியலுக்கு மேற்கே அமைந்துள்ள பின்கோர்ட் நகரின் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தொடர்ச்சியாக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

ஷேன்-ப்ளூ உயர்நிலைப் பள்ளியில், இந்தக் கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களைத் தொடர்ந்து, சுமார் 30 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் பாடசாலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் படிக்கட்டுப் பகுதியில் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனையடுத்து, தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, வகுப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மாணவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு முன்னதாக, செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில், பாடசாலைக்கு அருகில் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் பாடசாலையும் மூடப்பட்டது.

தொடர்ச்சியான சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த மாத ஆரம்பத்தில் பாடசாலையில் பாதுகாப்புக் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டதுடன், கூடுதல் கண்காணிப்பாளர்களும் பாதுகாப்புப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பாடசாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனச் சில பெற்றோர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, புதிய கல்வியாண்டில் பாடசாலையில் இணைந்துள்ள இளைய மாணவர்கள் இத்தகைய சம்பவங்களால் மனரீதியாகப் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கியூபெக் மாகாணத்தின் பொதுப் பாடசாலைகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகப் புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பாடசாலை ஆதரவுப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்து, சுமார் 30 ஆயிரம் சம்பவங்களை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் உதைத்தல், குத்துதல், கடித்தல் மற்றும் கீறுதல் உள்ளிட்ட உடல்ரீதியான தாக்குதல்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.

மேலும், மொன்றியல் நகரிலுள்ள 92 உயர்நிலைப் பாடசாலைகளில், ஏழாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை கல்வி பயிலும் 5,800-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, வன்முறை அனுபவித்த மாணவர்களின் விகிதம் 2016–2017 கல்வியாண்டில் 36 சதவீதமாக இருந்த நிலையில், 2022–2023 கல்வியாண்டில் 41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான மனநலப் பாதிப்புகள், சமூகத் திறன்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் இணையவழி வன்முறைகள் உள்ளிட்ட பல காரணிகள் இந்த அதிகரிப்புக்குப் பங்களித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்களிடையே வன்முறையைத் தடுப்பதற்கு ஆரம்பகட்டத்திலேயே தலையீடுகளை மேற்கொள்வதுடன், மாணவர்கள் சமூகத்தில் சிறப்பாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியல் காவல்துறையில் இளம் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த செய்தி மொன்றியலில் தொடரும் சாலை உப்பு பயன்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், போராடுகிறார் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையர்!

ஜூன் 12, 2026
கியூபெக்

ஒன்டாரியோவிலிருந்து வரும் அனுபவமற்ற லொறி ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த கியூபெக் அரசு

ஜூலை 10, 2026
கியூபெக்

மொன்றியலில் போதைப்பொருள் பயன்படுத்தும் மையத்தை மாற்றுமாறு பேரணி ஒன்று முன்னெடுப்பு

செப்டம்பர் 16, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார் – இருவர் மரணம்

ஜூன் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?