Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி வசூலிப்பு – 6 பேர் கைது

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழில் மீற்றர் வட்டி வசூலிப்பு மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், இளைஞர்கள் அறுவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் வசிக்கும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் குறித்த அறுவரில், இருவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதிகளில் இளைஞர்கள் சிலர் குழுவாகச் செயற்பட்டு, வன்முறைகளில் ஈடுபடுவதாகவும், அடாவடியாக மீற்றர் வட்டி வசூலிப்பதாகவும் பொலிஸாருக்குப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறையை மீறி, ஊழியர்களை அச்சுறுத்தி தமது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுக்கு எரிபொருள் நிரப்பிச் செல்வதாகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது குறித்த இளைஞர் குழுவைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், அவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அறுவரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த குழுவின் தலைவரெனச் சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட ஒன்பது பேர், கடந்த மாதம் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்தபோது பெருந்தொகைப் பணத்துடன் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு
அடுத்த செய்தி கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

காளானில் மின்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை !

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெண்படல நோய் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

டிசம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கியுடன் கைதான 67 வயதுடைய நபர்

டிசம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?