கொழும்பு கிராண்ட்பாஸ், ஜோசப் வீதியில் நேற்று (24) இரவு T-56ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்தே இவ்விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டு குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் .
கைதான நபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொழும்பு 14ஐ சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
