Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை!

அக்டோபர் 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்றைய தினம் வியாழக்கிழமை  நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனின் ஒழுங்குபடுத்தலில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.

தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் தெற்கு, பாலாவி மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி இந்நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது, கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலை மற்றும் கச்சாய் மகா வித்தியாலயம் ஆகியன பாதுகாப்பான இடைத்தங்கல் முகாம்களாக அடையாளப்படுத்தப்பட்டு, வெள்ள அனர்த்தத்தின்போது மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டன.

தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் உதவிப் பணிப்பாளர் என்.கே. அலகக்கோன், இராணுவத்தினர், பொலிஸார், பிரதேச சபை, சுகாதார சேவைப் பிரிவினர், தொண்டர் நிறுவனங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பிரதேச செயலாளரால் தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக, உயிர்ப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன், பொதுமக்கள் தாமதமின்றித் தமது பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்ட பாதுகாப்பான இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஒத்திகையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். இவ்விரு பாடசாலைகளும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் அந்தப் பகுதிக்கான பாதுகாப்பான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் வெள்ள அனர்த்த அபாயம் அதிகரிக்கக்கூடிய நிலையில், ஏற்கனவே வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, பொதுமக்கள் அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்யாது, தமது உயிரையும் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
அடுத்த செய்தி மொன்றியலில் விரிவடையும் உயிரி மருந்துத் துறை — Celltrion நிறுவனத்தின் புதிய அலுவலகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டி

அக்டோபர் 13, 2026
1
இலங்கை

காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான கலந்துரையாடல்…

ஏப்ரல் 1, 2025
இலங்கை

ஐ.நா ஆணையாளருக்கு அரியநேத்திரன் விடுத்துள்ள கோரிக்கை!

ஆகஸ்ட் 8, 2025
இலங்கை

யாழ் மாவட்ட செயலரின் மகன் விபத்து.

பிப்ரவரி 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?