2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமான முன்னுரிமை வாக்குகளை பெற்ற தமிழ் பொதுவேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாக்கிசெல்வம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இலங்கையில் நடந்த சர்வதேச அளவிலான குற்றச்செயல்கள் குறித்து உண்மையான பொறுப்பேற்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், அவர்களின் நம்பிக்கை சிதையும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
