Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தொடர் விடுமுறை: தொடருந்து நிலையங்களில் கூட்டம்!

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டுத் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை சென்டிரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் தொடருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சனிக்கிழமை (17.10.2026) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (18.10.2026) விடுமுறையைத் தொடர்ந்து, திங்கட்கிழமை ஆயுத பூஜை மற்றும் செவ்வாய்க்கிழமை விஜயதசமி ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறையாகும். இதனால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைப்பதால், மக்கள் திரளாகச் சொந்த ஊர் நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் மூலம் செல்ல முயன்றதால் தொடருந்து நிலையங்களின் நடைமேடைகள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

அதேபோன்று, சென்னை கிளாம்பாக்கத்திலும் பெருமளவிலான பயணிகள் காணப்பட்டனர். சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகத் தமிழக அரசு சார்பில் ஏராளமான சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மாலையில் பெய்த கனமழை காரணமாகத் திருச்சி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உருவானது. சில பயணிகள் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்துக்கொண்டு முந்தைய தினமே புறப்பட்டுச் சென்ற நிலையில், சனிக்கிழமை பணிபுரிய வேண்டியவர்கள் நாளை மாலைக்குப் பின்னரே புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி தவெக மாவட்ட நிர்வாகியிடம் 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
அடுத்த செய்தி வீடற்ற நபர் மீது சிறுநீர் கழித்தக் குற்றச்சாட்டு: அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு, புதின் அழைப்பு!

ஏப்ரல் 10, 2025
இந்தியா

பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் மாபெரும் வெற்றி: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆகஸ்ட் 3, 2026
இந்தியா

கொல்கத்தாவில் துர்காபூஜையில் கூட்டநெரிசல்: 25 பேர் காயம்!

அக்டோபர் 17, 2026
இந்தியா

ராமேஸ்வரம் கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 5 வயது ஆண் யானை

செப்டம்பர் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?