Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

கொல்கத்தாவில் துர்காபூஜையில் கூட்டநெரிசல்: 25 பேர் காயம்!

அக்டோபர் 17, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 25 பேர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு கொல்கத்தாவில் முக்தா ராம் பாபு தெருவில் அமைந்துள்ள சோர்பகன் சர்போஜனின் துர்கா பூஜை பந்தலில் மக்கள் கூடியிருந்தபோது திடீரென இந்தக் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதில் பலர் மயங்கி விழுந்த நிலையில், முதற்கட்டத் தகவல்களின்படி குறைந்தது 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

மேலும் இச்சம்பவத்தில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து கொல்கத்தா காவல்துறையினர், மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு குழுவினருடன் இணைந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள கல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நீடிக்கிறது.

மக்கள் துர்கா பூஜைக்காகக் கூடியிருந்தபோது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பந்தலுக்கு வெளியே காத்திருந்த பெருந்திரளான மக்கள் உள்ளே முண்டியடித்துச் சென்றபோது சிலர் சாலையில் விழுந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், பூஜை பந்தலின் வெளியேறும் வாயிலில் இருந்த கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, பாஜக மாநிலத் தலைவர் மற்றும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பூஜை ஏற்பாட்டாளர் விகாஸ் தாஸ் கூறுகையில், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும், தற்போது தங்களது முழு கவனமும் மீட்புப் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில்தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்டநெரிசல் குறித்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுடைந்தும் வருத்தமடைந்தும் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், துர்கா பூஜைக்காகக் கொல்கத்தா வந்தடைந்த அமித் ஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி பந்தல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஓராண்டை நிறைவு செய்த ‘பைசன் காளமாடன்’!
அடுத்த செய்தி அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டபின் விடுவிக்கப்பட்ட அபிஜீத் தீப்கே!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

ஏப்ரல் 18, 2026
இந்தியா

இந்தியா, இத்தாலி இணைந்து செயல்படுவதற்கான காரணம் இதுதான்-வெளியுறவுத்துறை அமைச்சர்

டிசம்பர் 11, 2025
இந்தியா

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

செப்டம்பர் 1, 2026
இந்தியா

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி!

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?