Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். காணி விடுவிப்பு தொடர்பில் பிரதமரிடம் கேட்டதால் பரபரப்பு.

பிப்ரவரி 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கபடாத வலி வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் ஹரினி அமரசூரிய பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஏழாலை ஏழு கோவிலடியில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான கபிலன் உள்ளிட்ட சிலர் உரையாற்றினர்.

இறுதியாக பிரதமர் ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாற்றினார். உரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணமலாக்கப்பட்டோர் விவாகரம் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

இந்நிலையில் பிரதமர் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கி மக்களை சந்திக்க அருகில் வந்தார்.

இதன்போது பிரதமரை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக பேச காத்திருந்த காணி உரிமையாளரொருவர் பலாலி பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பது தொடர்பாக தனது ஆதங்கத்தை பிரதமரிடம் நேரடியாக தெரிவித்தார்.

இதன்போது பிரதமர் ஏனையவர்களுடன் பேச சென்றபோது குறித்த காணி உரிமையாளர் உங்கள் அரசியலுக்காக எங்களை பயன்படுத்த வேண்டாம் என தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தெரிவித்தார்.

இதன்போது பிரதமரை சூழ்ந்திருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த காணி உரிமையாளரை அங்கிருந்து அகற்றியதுடன் அதனை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பிரதமர் ஹரினி அமரசூரிய பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

முந்தைய செய்தி யாழ் . பல்கலை கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு – வகுப்புத்தடை மீள பெறப்பட்டது.
அடுத்த செய்தி சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு!

நவம்பர் 6, 2025
இலங்கை

நல்லூரானுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

ஆகஸ்ட் 16, 2025
இலங்கை

ஆவரங்காலில் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மினாநகர் மக்கள் தமது வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

ஜூலை 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?