வவுனியா மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இஃப்தார் நிகழ்வானது சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வானது வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மௌளவி சாதிக்கின்பாரியினால் இஃப்தார் தொடர்பான சிறப்பு சொற்பொழிவொன்றினை ஆற்றியிருந்தார்.
கூட்டுறவு பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான உப்பாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரத்தின, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை அமீத் வீரகோன் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
