Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசம் காணப்படும் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.-செல்வம் அடைக்கலநாதன்

ஜூன் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடற்படை முகாம் அமைக்கப் பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப் படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமைமாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முப்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக தெரிவித்து இருந்தார் . இருந்த போதிலும் பல இடங்களில் அது நடைபெறவில்லை.

இதேவேளை மன்னார் பள்ளிமுனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கடற்படை முகாம் அமைக்கப் பட்டுள்ள தனியார் காணிகள் குறித்து நாங்கள் பாராளுமன்றத்தில் பேசி இருந்தோம்.

ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பி இருந்தோம் .ஆனால் தற்போது இந்த கடற்படை முகாம் அமைந்திருக்கும் காணிகளை வருகின்ற 20 ஆம் திகதி அளவீடு செய்யப் போவதாக துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு இருக்கிறது.

எனவே நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. மக்கள் இதற்கு நிச்சயம் போராடுவார்கள்.இந்த நிலையை மாற்றுவதற்கு இது சம்பந்தமாக நாங்கள் ஜனாதிபதிக்கும் தெரிவிக்க இருக்கிறோம்.

அதேபோன்று அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் நாங்கள் இது சம்பந்தமான முறைப்பாடு செய்ய இருக்கிறோம்.இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் .அத்தோடு பள்ளி முனை மக்களின் காணிகளை அவர்களிடமே பகிர்ந்தளிக்க வேண்டும்.

கடற்படை அதை அபகரிக்கும் செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் மக்கள் போராட்டம் வெடிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கையாக உள்ளது.

எனவே ஜனாதிபதியிடம் இந்த செயற்பாட்டை நிறுத்துமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் நாங்கள் பேச இருக்கிறோம் என்றார்.

முந்தைய செய்தி நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தம்
அடுத்த செய்தி யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த கடற்தொழில் அமைச்சர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்!

அக்டோபர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போத்தலால் தன்னையே காயப்படுத்தியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!

ஏப்ரல் 25, 2025
இலங்கை

யாழில் உயிரிழந்த 11 வயது சிறுவன்

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை தயாரிக்க நடவடிக்கை!

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?