நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் நுவரெலியாவில் அதிகரித்த மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த நாட்களாக பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
அந்த பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன சாரதிகள் அசௌகரியங்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர்.
நுவரெலியா நகரப் பகுதிகளில் முறையற்ற கால்வாய் அமைப்புகள் மற்றும் மதில்கள் காரணமாக மழைநீர் முறையாக வடிந்தோட முடியாமல் பல வீதிகளில் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
