Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

எலோன் மாஸ்க்கின் பிரிவினைக் கருத்தை நிராகரித்த முதல்வர்கள்

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலிருந்து கியூபெக், அல்பர்ட்டா மற்றும் சாஸ்காட்செவன் ஆகிய மாகாணங்கள் பிரிந்து தனியாக இயங்குவதே சிறந்தது என எலோன் மாஸ்க் முன்வைத்த யோசனையை, அல்பர்ட்டா மற்றும் சாஸ்காட்செவன் மாகாணங்களின் முதல்வர்கள் உடனடியாக நிராகரித்துள்ளனர்.

பிரபல தொழிலதிபரான எலோன் மாஸ்க், எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றில், “கியூபெக் மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து தனிநாடாக இயங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், அல்பர்ட்டா மற்றும் சாஸ்காட்செவன் ஆகிய மாகாணங்களும் கனடாவிலிருந்து பிரிவதே அந்தந்த மாகாணங்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்குப் பதிலளித்துள்ள சாஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ (Scott Moe), “இல்லை” என ஒற்றை வார்த்தையில் மிகத் தீர்க்கமாக எலோன் மாஸ்க்கின் கருத்தை நிராகரித்துள்ளார்.

அதேபோல, அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்தும் (Danielle Smith) எலோன் மாஸ்க்கின் யோசனையைத் தாம் முற்றாக மறுப்பதாகக் கடுமையான பதிலை வெளியிட்டுள்ளார்.

கியூபெக் மாகாணத் தேர்தலில் சுயாட்சிக் கொள்கையைக் கொண்ட ‘பார்ட்டி கியூபெக்வா’ கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையிலும், அல்பர்ட்டா மாகாணத்தில் கனடாவில் நீடிப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பது தொடர்பில் மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்படவுள்ள நிலையிலும் எலோன் மாஸ்க்கின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் உயரமான கட்டிடத்தில் சிக்கிய இரு தொழிலாளர்கள் மீட்பு
அடுத்த செய்தி மொன்றியலில் மரதன் போட்டி — வார இறுதியில் ஏற்படும் போக்குவரத்து மாற்றங்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வற்றாப்பளை ஆலய திருவிழாவிற்கான போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம்!

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு

ஆகஸ்ட் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இறப்பர் உற்பத்தி நிறுவனத்தில் திடீர் தீ விபத்து 

பிப்ரவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

பயணிகளுக்கு 10 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தவுள்ளது ஏயார் கனடா!

ஏப்ரல் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?