காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த ‘சுபம்’ கப்பலில் தங்கக் கடத்தல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சட்டவிரோதமாக தங்கத்தை கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடத்தல் முயற்சியுடன் தொடர்புடையவர்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

