பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருக்குச் சொந்தமான மைக்கோ ரக துப்பாக்கி மற்றும் மகசீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது “கெஹெல்பத்தார பத்மே” என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் உரகஸ்மன்ஹந்திய – கொஸ்கொட வீதியில் உள்ள சிறிய கால்வாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து இந்த துப்பாக்கி மற்றும் மகசீன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
