மொன்றியாலின் Rivière-des-Prairies–Pointe-aux-Trembles பகுதியில், நகர நிர்வாகத்தின் முத்திரை ( Logo) பயன்படுத்தப்பட்ட போலி போலி வெளியேற்ற (Evacuation) அறிவிப்புகள் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பல குடியிருப்பாளர்கள் தங்களுடைய Mailbox-களில் இந்தக் கடிதங்களைக் கண்டுள்ளனர். கடிதத்தில், குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு ஈடாக நூற்றுக்கணக்கான டொலர்கள் நிதியுதவி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அந்தப் பணத்தைப் பெறுவதற்காக இணையத்தில் (Online)-ல் சென்று வங்கி தகவல்கள் ( Banking Information) உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அறிவிப்பு முற்றுமுழுதாக போலியானது என்று Rivière-des-Prairies–Pointe-aux-Trembles Borough நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மேலும், நகரத்தின் பெயர் மற்றும் Logo யன்படுத்தப்பட்டிருந்தாலும், அந்தக் கடிதத்தில் கையொப்பம் இல்லாமை, எழுத்துப் பிழைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இருந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போலி அறிவிப்பை வீடுகளில் விநியோகித்ததாகக் கருதப்படும் ஒருவரின் செயல்பாடும் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த Security Camera-வில் பதிவாகியுள்ளது. அந்த நபர் Sportswear அணிந்திருந்ததுடன், கண்ணாடி மற்றும் பச்சை நிற Scarf அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சில குடியிருப்பாளர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து யாராவது வெளியேறிய நேரத்தைப் பயன்படுத்தி வேறு ஏதேனும் குற்றச்செயல் நடைபெறுமா என்ற கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, Montréal நகர நிர்வாகம் எந்தவொரு இழப்பீட்டையும் பெறுவதற்காக அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் (Website-ல் )வங்கி தரவுகளை(Banking Information) வழங்குமாறு ஒருபோதும் கேட்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இப்படியான கடிதம் உங்கள் வீட்டுக்கு வந்தால், அதிலுள்ள இணைப்பை (Link-ஐ) Click செய்ய வேண்டாம்; எந்தவொரு உங்கள் தனிப்பட்ட l அல்லது வங்கி கணக்கு விபரங்களையும் வழங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நகரத்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் எந்தவொரு அறிவிப்பும் உண்மையானதா என்பதில் சந்தேகம் இருந்தால், Montréal 311 சேவையைத் தொடர்புகொண்டு தகவலை சரிபார்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மொன்றியலில் போலி போலி வெளியேற்ற( Evacuation) அறிவிப்புகள் தொடர்பான இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

