Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்

செப்டம்பர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அக்டோபர் 5ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குடியேற்றம், செயற்கை நுண்ணறிவு, அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தற்போது தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

குடியேற்ற விவகாரத்தில், Parti Québécois கட்சி கியூபெக் மாகாணத்தில் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது. அந்தக் கட்சி தற்போது கியூபெக்கில் உள்ள சுமார் 500,000 தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை 250,000 ஆகக் குறைக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளது.

இதற்கு Québec Liberal Party உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இந்தக் கொள்கை கியூபெக் மாகாணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என Liberal Party தலைவர் Charles Milliard தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பான விவாதங்களும் தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மேலும், மாகாணத்தின் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பான கேள்விகளும் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே,கியூபெக் தேர்தலில் வெளிநாட்டு தலையீடு இடம்பெறக்கூடும் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக Coalition Avenir Québec தலைவர் Christine Fréchette, கனடா பிரதமர்மார்க் கார்னியை யை சந்திக்க கோரியுள்ளதுடன், கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையான CSIS-ஐயும் தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கியூபெக்கின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் கியூபெக் வாக்காளர்கள் மாகாணத்தின் அடுத்த அரசாங்கத்தைத் தெரிவுசெய்யவுள்ளனர்.

முந்தைய செய்தி கனடா அமெரிக்க வர்த்தகப் பேச்சு – உடனடி உடன்பாட்டுக்கு வாய்ப்பில்லை என அமெரிக்கா அறிவிப்பு
அடுத்த செய்தி ராமேஸ்வரம் கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 5 வயது ஆண் யானை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

ஆறு வயது மகள் உயிரிழந்த சம்பவம் – 9 மாதங்களாக காவலில் தந்தை

செப்டம்பர் 16, 2026
கியூபெக்

நீண்ட கால விதியைக் கைவிட தீர்மானிக்கும் மாகாண அரசு

டிசம்பர் 9, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ‘Bill 1’

ஜூன் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?