Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

செப்டம்பர் 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கல்லுண்டாய் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. ஜெகதீசன், யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன், மாநகர சபை உறுப்பினர்களான என். எம். அப்துல்லாஹ், எஸ். சொரூபன், ரி. மயூரன் கிளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் ப. கஜமுகன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவி சிரேஷ்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கல்லுண்டாய் பகுதியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, நடைமுறைச் சாத்தியமானதும் நிலையானதுமான தீர்வொன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இவ் விசேட கூட்டம் கூட்டப்பட்டதாக என யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவசரமாகவோ அல்லது ஒரு தரப்பின் கருத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டோ தீர்மானங்களை மேற்கொள்வது பொருத்தமானதல்ல. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கல்லுண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுப்பதற்கான தீர்வுகளை அடையாளம் காண்பதுடன், அவற்றை ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக மட்டுப்படுத்தாமல், தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தக்கூடிய நிலையான செயற்றிட்டமாக முன்னெடுக்க வேண்டும்

குறிப்பாக, பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, தற்போதைய நிலைமைகளுக்கு பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடையாளம் கண்டு, அவற்றை நீண்டகால அடிப்படையில் நிலைபேறான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட செயலர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் கல்லுண்டாய் பகுதியில் திண்மக்கழிவு மேடு எரியூட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் புகைமூட்டத்தால் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாநகர சபை, பிரதேச சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு அனைத்துத் தரப்பினரும் இணைந்தவகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முந்தைய செய்தி செம்மணியில் கோர விபத்து – மூவர் படுகாயம்!
அடுத்த செய்தி மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இந்த ஆண்டு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டிய திகதிகள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கைதான இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காட்டு யானை தாக்கியதில் 7வயது சிறுமியொருவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நவம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?