Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியரின் டீன் பதவி இடைநீக்கம்

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த 20 வயதான மாணவர் சஹில் வகோடே தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாணவரின் குடும்பத்தினரும் சக மாணவர்களும் நடத்திய போராட்டம் தீவிரமடைந்தது.

இதனையடுத்து, பேராசிரியர் சூர்யநாராயணா தூல்லாவின் டீன் பதவியை இடைநீக்கம் செய்து ஐஐடி பாம்பே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர் சஹில் வகோடே தேர்வு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் தூல்லா மீது தற்கொலைக்குத் தூண்டியமை மற்றும் சாதிப் பாகுபாடு காட்டியமை தொடர்பாகக் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, இயக்குநர் பேராசிரியர் ஷிரீஷ் கேதாரே, சூர்யநாராயணா தூல்லாவின் டீன் பதவியை உடனடி அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

எனினும், அவர் தொடர்ந்து பேராசிரியராகப் பணியாற்றுவார் என்றும், விசாரணைக்குப் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சஹில் வகோடே தேர்வின் போது ஏ.ஐ. (AI) தளத்தைப் பயன்படுத்தியதாக நிர்வாகம் வெளியிட்ட ஆரம்பகட்ட அறிக்கைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உரிய விசாரணை முடிவடைவதற்கு முன்னரே இத்தகைய விவரங்களை வெளியிட்டது பொருத்தமற்றது எனக் கூறி, ஐஐடி பாம்பே நிர்வாகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளது.

மாணவர்கள் சமர்ப்பித்த 18 அம்சக் கோரிக்கைப் பட்டியில் இயக்குநர் கையெழுத்திட்டுள்ள நிலையில், மும்பை குற்றப்பிரிவு பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி டியாகோ கார்சியா சர்ச்சைக்குத் தீர்வு: பிரித்தானியப் பிரதமர் உறுதி
அடுத்த செய்தி டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை

ஆகஸ்ட் 19, 2026
இந்தியா

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்

மே 7, 2026
இந்தியா

புது டில்லி கார் குண்டுவெடிப்பில் புதிய திருப்பம்!

நவம்பர் 16, 2025
இந்தியா

நாக்பூரில் ரூ.25 கோடி போலி தங்க நகை கடன் மோசடி: குற்றவாளி கைது

ஆகஸ்ட் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?