Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்

செப்டம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அரசு நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஆப்கானியப் பகுதியில் நடத்தப்பட்ட இரவு நேர வான்வழித் தாக்குதலில் ஆண், பெண் மற்றும் சிறுமி உட்பட மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக்குழு (UNAMA) உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பக்திகா (Paktika) மற்றும் குனார் (Kunar) ஆகிய மாகாணங்களை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தலிபான் நிர்வாகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தலிபான் வெளியுறவு அமைச்சு கண்டனக் குறிப்பை வழங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் கோஹாட் (Kohat) மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு ‘ஷுரா இத்தேஹாத்-உல்-முஜாஹிதீன்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை ஹங்கு மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பாகிஸ்தான் படைவீரர்களும் 8 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.

இவ்வாறான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே பாகிஸ்தான் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குனார் மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்ததாக தலிபான் துணைச் செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார்.

பக்திகாவில் கடை ஒன்றும் காலியாக இருந்த வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளன.

எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது.

எனினும் இக்குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு மறுத்துள்ளதுடன், தீவிரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் கூறியுள்ளது.

முந்தைய செய்தி பெலாரஸ் மீதான தடைகளை தளர்த்த இது சரியான தருணம் அல்ல: லிதுவேனியா எச்சரிக்கை
அடுத்த செய்தி டியாகோ கார்சியா சர்ச்சைக்குத் தீர்வு: பிரித்தானியப் பிரதமர் உறுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காஸா நகரத்தை ஆக்கிரமிக்க தரைவழித் தாக்குதல்கள் ஆரம்பம்!

ஆகஸ்ட் 21, 2025
உலகம்

தாய்லாந்தின் தாய் ராணி காலமானார்

அக்டோபர் 25, 2025
உலகம்

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்!

ஜூலை 18, 2025
உலகம்

தாய்லாந்தின் பிரதமர் பதவி நீக்கம்!

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?