Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 30,000 தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்கு கடும் அச்சுறுத்தல்

செப்டம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா விதித்துள்ள கடுமையான இறக்குமதி வரிகள் மற்றும் அதற்கு பதிலடியாக கனடா மேற்கொண்டுள்ள வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக, கியூபெக் மாகாணத்தில் சுமார் 30,000 தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் எச்சரித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், வர்த்தகப் போரின் தீவிரம் கருதி, தமது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த பிரெஷெட், அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி புதிய பொருளாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ள நிலையில், கனடாவும் பதிலடி வரிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதனால் கியூபெக்கின் ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 8.8 சதவீதப் பொருட்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கியூபெக்கின் முக்கிய பொருளாதாரத் தூண்களான மரக்கட்டை தயாரிப்பு (Softwood Lumber), பால் பொருட்கள், அலுமினியம், எஃகு மற்றும் விண்வெளி உதிரிபாக உற்பத்தித் துறைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் கியூபெக் மாகாணம் முழுவதும் 18,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நிலவும் வர்த்தக நெருக்கடியால் மேலும் 30,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

டிரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு கியூபெக் ஒருபோதும் தலைவணங்காது எனவும் வேலைவாய்ப்புகளையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தப் போவதாகவும் செய்தியாளர் சந்திப்பில், கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி சமூகநீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதி
அடுத்த செய்தி எலெக்ஷன்ஸ் கியூபெக் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நுனாவுட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிபரல் கட்சியில் இணைந்தார்

மார்ச் 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பூர்வகுடி மக்களுக்கு எதிரான பாகுபாடு – கியூபெக் அரசாங்கத்தின் மீது விமர்சனம்

நவம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கிலிருந்து அமெரிக்காவிற்கு உற்பத்தியை மாற்றுகிறது சப்போரோ மதுபான நிறுவனம்!

செப்டம்பர் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட கோர்டி ஹோவ் சர்வதேச பாலம்

ஜூன் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?