மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது
யாழ்ப்பாணம் – மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிள்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மின்சார கேபிள்கள் திருடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இருவருக்கும் 23 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களால் திருடப்பட்ட கேபிள்களும் மீட்கப்பட்டுள்ளதுடன்
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

