Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் ஓட்டுநர் பல்ஜீத் சிங்கிற்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு பரிந்துரைப்பு

செப்டம்பர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் தெற்குப் பகுதியில் (South Shore) 2022-ஆம் ஆண்டு லாரி ஒன்றை ஓட்டிச் சென்றபோது ஏற்படுத்தி தாய் மற்றும் அவரது 11 வயது மகன் உயிரிழக்கக் காரணமான ஓட்டுநர் பல்ஜீத் சிங்கிற்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளனர்.

2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் லோங்கய்ட் (Longueuil) பிராந்தியத்தின் செயிண்ட்-ஹூபர்ட் பகுதிக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலை 30-இல் (Highway 30) இந்த விபத்து நிகழ்ந்தது.

லாரியை அதிவேகமாக ஓட்டிச் சென்ற அந்த பல்ஜீத் சிங் தனது கைபேசியில் இணையவழி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்ததாகக் சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சாலையில் அமைக்கப்பட்டிருந்த வீதிப் பராமரிப்பு மண்டலத்தை (construction zone) நெருங்கியபோது ஓட்டுநர் பல்ஜீத் சிங் லாரியின் வேகத்தைக் குறைக்கத் தவறியதால், அது முன்னால் சென்ற பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிப் பாரிய விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில், 42 வயதான நான்சி லேபிரான்சுவா (Nancy Lefrançois) மற்றும் அவரது 11 வயது மகன் லோயிக் (Loïc) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 10 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்தவுடனேயே மன உளைச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர் பல்ஜீத் சிங், மறுநாளே அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.

முதலில் டொராண்டோவிற்குத் தப்பிச் சென்ற அவர், அங்கிருந்து இந்தியா வழியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக சர்வதேசக் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இறுதியில் 2025-ஆம் ஆண்டு அமெரிக்க அரசினால் கலிபோர்னியாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு கனடாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பல்ஜீத் சிங் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அவர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விசாரணையை ஆரம்பித்துள்ள கியூபெக் மாகாண கணக்காய்வாளர் நாயகம்
அடுத்த செய்தி எட்மண்டன் தளத்தில்  நடைபெற்ற கனேடியப் படைகளின் அணிவகுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

சிறுவர்களை வன்முறைக்கு இழுத்த 764 குழு – கியூபெக் இளைஞர் கைது!

ஏப்ரல் 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

லவால் ஸ்டார்பக்ஸ் கடையில் திடீர் துப்பாக்கிச் சூடு

அக்டோபர் 2, 2025
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் மாபெரும் போராட்டம்

பிப்ரவரி 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரத்தின் மேயர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?