Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

இளையராஜாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கோரி ‘சரிகம’ நிறுவனம் மனுத் தாக்கல்

செப்டம்பர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா தனது பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவைச் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது.

அத்துடன், பறிமுதல் செய்யப்படும் சொத்துகளை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையைத் தங்களிடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு உரிமை கொண்டாடவோ, அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என பிப்ரவரி 13 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஜூலை 1 அன்று அந்தத் தடையை உறுதி செய்திருந்தது.

திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அந்தப் பாடல்களின் முறையான பதிப்புரிமையைப் பெற்றுள்ளதாகச் சரிகம தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நீதிமன்றத் தடையையும் மீறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன், ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா தரப்புப் பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வருவதாகச் சரிகம குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், சரிகம நிறுவனத்தின் புகாருக்குப் பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

முந்தைய செய்தி An Ordinary Man திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
அடுத்த செய்தி தேசிய வரலாற்று அருங்காட்சியகத் திட்டம்: பழங்குடியினரை புறக்கணிப்பதாகப் பலத்த சர்ச்சை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

நடிகை வரலக்ஷ்மி இயக்கும் சரஸ்வதி திரைப்படம்

டிசம்பர் 30, 2025
சினிமா

நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியீடு

ஆகஸ்ட் 30, 2026
சினிமா

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை மோகினி

ஆகஸ்ட் 10, 2026
அண்மைய செய்திகள்சினிமா

‘அமரன்’ படத்துக்கு சர்வதேச அங்கீகாரம்….

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?