Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘ராஜா சம்பவம்’: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்பட இசை வெளியீடு!

செப்டம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’.

இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540வது திரைப்படமாக அமைந்துள்ள இப்படத்திற்குத் தயாரிப்பாளர்களாக கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜோதி தேஷ்பாண்டேவின் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பதிப்பைப் பார்த்த இளையராஜா “அழகான படம்” எனப் பாராட்டியதுடன், படம் திரைக்கு வரும் முன்பே இதன் பின்னணி இசையைத் தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என்று விரும்பினார்.

அதன்படி, தற்போது 18 பின்னணி இசைத் துணுக்குகள் அடங்கிய பிரத்யேக ஆல்பத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆல்பம் டிஜிட்டல் தளங்கள் தவிர்த்து இசைப்பிரியர்களுக்காக வரம்பிற்குட்பட்ட வினைல் (Vinyl) ரெக்கார்டு வடிவிலும் வெளியாகிறது.

மேலும் இளையராஜாவின் புகழ்பெற்ற ‘How to name it’ ஆல்பத்தில் இடம்பெற்ற ‘Do anything’ என்ற இசைக்கோர்ப்பு நவீனப்படுத்தப்பட்டு இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான ‘கல்யாண விருந்து’ மற்றும் இளையராஜாவால் எழுதப்பட்டு பாடகி சுவேதா மோகனுடன் சேர்ந்து பாடிய ‘முத்துமணி’ என்ற ராஜா ட்ரான்ஸ் ரகக் காதல் பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) முதன்முறையாகத் திரையிடப்படவுள்ள ‘டோரதி’ திரைப்படம், வரும் செப்டம்பர் 25 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

முந்தைய செய்தி TRM Picture தயாரிப்பில், ‘MANITHEE’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா கனடாவில் நடைபெறவுள்ளது.
அடுத்த செய்தி கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சந்திப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கௌரி கிஷன் நடிப்பில் உருவாகும் “தாரகை” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆகஸ்ட் 20, 2026
Uncategorizedஅண்மைய செய்திகள்

பாடகி சின்மயி மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து

ஜூன் 3, 2025
சினிமா

நெட்பிளிக்ஸில் வெளியாகும் “மேட் இன் கொரியா”

பிப்ரவரி 24, 2026
சினிமா

ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ” HI “

ஆகஸ்ட் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?