Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

செப்டம்பர் 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (6) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம் இந்த நிலையில் நாடு அழிவு பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவினால் நாட்டிற்கு உண்மையான சுதந்திரம் 2009 ம் ஆண்டு கிடைத்தது.

அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர் அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ஷ எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும். மக்களின் மனங்களை அறியாத அரசாங்கம் இன்று தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றது.

அன்று பொருட்களின் விலை குறைப்பதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முந்தைய ஆட்சி காலங்களை விட பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வைத்தியசாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் நிறைந்து வழிகின்றனர்.

இன்று நாடே போர்களமாக மாறியுள்ளதுடன் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். எனவே இந்த தவறான செயலை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.

எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை உடனடியாக விடுதலை செய்யும்படி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனடாவில் லிபரல் கட்சிக்கு முக்கிய வெற்றி
அடுத்த செய்தி TRM Picture தயாரிப்பில், ‘MANITHEE’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா கனடாவில் நடைபெறவுள்ளது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நயினை நாக பூசணி அம்மனை வழிபட்டார் ஜனாதிபதி

ஜனவரி 16, 2026
இலங்கை

யாழில். இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பிரதான சந்தேகநபர் ஒரு வருடத்தின் பின் கைது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

செப்டம்பர் 30, 2025
இலங்கை

14 இந்திய மீனவர்களின் வழக்கு.

பிப்ரவரி 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?