கடந்த 09-02-2025 மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
முதலாவதாக ஒரு படகில் 11 மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களின் வக்கில்,
1)குறித்த 11மீனவர்கள் மீது ஐந்து குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.
* அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11மீனவர்களுக்கும் 10ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
*இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
*இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமை இதற்காக 11மீனவர்களுக்கும் 50000ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டது. இதனை செலுத்த தவறின் 06மாத சிறைத்தண்டனை
குறித்த 11மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாகவும் காணப்படுவதால்.
படகு ஓட்டிக்கான தண்டணையாக -6மில்லியன் ரூபா செலுத்துமாறும் தவறின் 06மாத சிறைத்தண்டணையும்
உரிமையாளராகவும் காணப்படுவதால் 6மில்லியன் ரூபா செலுத்துமாறும் தவறின் 06மாத சிறைத்தண்டணை எனவே ஒரு மீனவர் குறித்த தண்டணையை அனுபவிக்க நேர்ந்துள்ளது.
படகு உள்ளிட்ட மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.