Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய குழியில் சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

செப்டம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற  குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.

நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு  எதிர்பக்கம் உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும்  ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் தண்ணீர் எடுப்பதற்காக  குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டியுள்ளதுடன் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று பகல் 11.00 மணியளவில் குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்ற போது வேலிக்கு அருகில் வெட்டிய குழியில் வீழ்ந்ததையடுத்து சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் எனவும் பாலம் நிர்மாணம் பணியின் போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்த சிறுவனின் உடல் பார்வையிட்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது டன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆயித்தியமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த பாலம் புனரமைப்பின் போது புனரமைப்பு பணியை மேற்கொண்டார்கள் அங்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாதலால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி கீழ் மல்வத்து ஓயா திட்டம் யாருக்கு? சத்தியலிங்கம் MP சரமாரிக்கேள்வி
அடுத்த செய்தி கொழும்பு, புறநகர்ப் பகுதிகளில் நீர் விநியோகத் தடை நீடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இடமாற்றம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் PTA & PSTB சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!

பிப்ரவரி 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாநகரசபை அரசியல் பழிவாங்கலில் தொழில் செய்ய இடையூறு – உறுப்பினர் குற்றச்சாட்டு

ஜூலை 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?