தமிழ் பெரியார் தனிநாயகம் அடிகளாரின் 45 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியா மாநகரசபை ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலையடியில் இடம்பெற்ற நிகழ்வில் மாநகரமுதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் மங்களவிளக்கேற்றியதுடன் திருவுருவத்திற்கு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.
மாநகரசபையின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


